News & Events


: Sports

கோயமுத்தூர் சஹோதயா அமைப்பு பள்ளிகள் நடத்திய (சி.பி.எஸ்.சி) பள்ளிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டி செவ்வாய் கிழமை (4.9.18) அன்று கோயமுத்தூர் எட்டிமடை அமிர்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 20 பள்ளிகள் கலந்துக்கொண்டன. இப்போட்டி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன. இதில் பொள்ளாச்சி ஏ. ஆர் பி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பதினான்கு வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடமும், பதினாறு வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடமும் பிடித்து வெற்றிபெற்றனர். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பரிசை ஏ.ஆர்.பி பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கவின் சித்தார்த்.பி , ஆதித்யா.ஜெ ஆகியோர் பெற்றனர் . வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசு கோப்பையும், கேடயமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் திரு. சுப்ரமணியம், செயலாளர் திரு. தமிழ்ச்செல்வன், பள்ளி நிர்வாகிகள் திருமதி. தங்கமணி தமிழ்ச்செல்வன், திருமதி. மகேஷ்வரி சுப்ரமணியன் மற்றும் பள்ளியின் முதல்வர் திரு. அரசு பெரியசாமி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்.


: விளையாட்டு விழா

பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் ஏ. ஆர். பி. பள்ளியின் 6 –வது ஆண்டு விளையாட்டு தின விழா (17/10/2018) புதன்கிழமை அன்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சேலம் மாவட்ட வருமான வரித்துறை இணை ஆணையர் திரு. N.சுப்ரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இவ்விளையாட்டு விழாவானது இறைவாழ்த்துடன் தொடங்கப்பட்டது . சிறப்புவிருந்தினர் திரு. N.சுப்ரமணியன் அவர்கள், பள்ளியின் தாளாளர் திரு . R.சுப்ரமணியம் , செயலாளர் திரு. P.தமிழ்ச்செல்வன், பள்ளி நிர்வாகிகளான திருமதி. மகேஸ்வரி சுப்ரமணியம் மற்றும் திருமதி தங்கமணி தமிழ்ச்செல்வன் அவர்கள் திருவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர். பள்ளியின் இயக்குநர் மற்றும் முதல்வருமான திரு. அரசு பெரியசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து பள்ளியின் தாளாளர் திரு R.சுப்ரமணியம் அவர்கள் தலைமையுரை ஆற்றுகையில், சிறுவர்கள் விளையாடும் போது தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக உருவாகிறது, சுயவிழிப்புணர்வு ஏற்படுகிறது என்று, விளையாட்டின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து சிறப்புவிருந்தினர் திரு . N.சுப்ரமணியன் அவர்கள் ஒலிம்பிக் சுடரை ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு விளையாட்டுக்களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களும், கேடையமும் வழங்கினார். இந்நிகழ்வை அடுத்து மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய கலைகளான, பரதம், கராத்தே, யோகா, சிலம்பம், வில்வித்தை, துப்பாக்கிச்சுடுதல் போன்றவற்றை சிறப்பாக நிகழ்த்திக்காட்டினர். இதனைதொடர்ந்து சிறப்புவிருந்தினர் திரு . N.சுப்ரமணியன் அவர்கள் பேசுகையில் விளையாட்டு மாணவர்களை சாதனையாளராக மாற்றுகிறது. ஒரு சிறந்த விளையாட்டு வீரராக வேண்டுமெனில் விடாமுயற்சி , ஒழுக்கம், தன்னம்பிக்கை, உடல்வலிமை, உயரிய குறிக்கோள், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டுமென்றும், மாணவர்கள் கல்வியோடு, விளையாட்டிலும் கலந்துகொண்டு வெற்றிபெற வேண்டுமென்று கூறினார். இறுதியாக தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.


: SPL ELECTION

We, ARB International school organized election to select the School Pupil Leader (SPL) and Assistant School Pupil Leader(ASPL) on 20-07-2018 in our school premises. The school management, the principal of the school , teachers and all the faculty members casted their votes. Later, the votes secured by each candidate were counted. Nanda Kishore.G.S. of 11th STD C section and Bargavi. G of 11th STD A section secured the highest number of votes and won the posts of SPLs(Boys & Girls) . Jaya suriya. K and Muna shifa. K of 9th A section secured the maximum number of votes and were elected as ASPLs(Boys & Girls). Followed by this, the Sworn in ceremony took place on 06-08-2018 in our school. The Chairman of the school Mr. Subramaniam. R and the school Director cum Principal Mr. Arasu Periyasaamy crowned the newly elected SPLs and ASPLs and also gave felicitations. The Secretary Mr.Tamilselvan . P, the school trustees Mrs.Thangamani Tamilsevan and Mrs.Maheshwari Subramaniam were also present during the function and congratulated the winners.